மோசமான பெண் ஒருவருடன் அருவருப்பான செயலில் பிரித்தானியப் பிரதமர் ஒருவர்: சூடுபிடிக்கும் எப்ஸ்டீன் விவகாரம்
எப்ஸ்டீனின் காதலி என அறியப்படும் கிஸ்லைன் மேக்ஸ்வெல் என்பவருடன் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் ஒருவர் அருவருப்பான செயலில் ஈடுபட்டதாக வரலாற்று ஆசிரியர் ஒருவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பிரதமர் ஒருவரும்
கடந்த வாரம் அமெரிக்காவின் நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பில் கொத்தாக பல ஆவணங்களை வெளியிட்டது. புகைப்படங்கள், காணொளிகள் மின்னஞ்சல் என 3 மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வரலாற்று ஆசிரியரான Andrew Lownie எப்ஸ்டீன் விவகாரத்தில் பகிர்ந்துள்ள ஒரு கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006ல் மன்னர் சார்லஸின் சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் மற்றும் எப்ஸ்டீனும் இணைந்து நடன அழகி ஒருவருடன் அருவருப்பான செயலில் ஈடுபட்டதாக ஆண்ட்ரூ லோனி தெரிவித்துள்ளார்.
ஆனால், இப்படியான செயலில் ஈடுபட்டவர்களில் ஆண்ட்ரூ மட்டுமின்றி, முன்னாள் பிரித்தானியப் பிரதமர் ஒருவரும் எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெல்லுடன் அருவருப்பான செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னர் பேச வேண்டும்
இருப்பினும், யார் அந்த முன்னாள் பிரித்தானியப் பிரதமர் என்பதை ஆண்ட்ரூ லோனி வெளிப்படுத்த மறுத்துவிட்டார். முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பில் எப்ஸ்டீன் விவகாரத்தில் இன்னும் பல உண்மைகள் வெளிவர இருக்கிறது என்றும், இதனால்தான் மன்னர் இந்த விவகாரம் தொடர்பில் பேச வேண்டும் என்று தாம் நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய மக்களின் கோரிக்கை என்பது, வர்த்தகத் தூதராக ஆண்ட்ரூ பணியாற்றிய காலம் குறித்து நாடாளுமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன், வர்த்தகத் தூதராக ஆண்ட்ரூ பணியாற்றிய காலக்கட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அவர்கள் வெளியிட வேண்டும்.
சட்டப்படி, அந்த ஆவணங்கள் தேசிய ஆவணக் காப்பகத்தில் இருக்க வேண்டும். அது நிலைமையைச் சீர்செய்யவும், ஓரளவு நம்பிக்கையை மீட்டெடுக்கவும் உதவும் என ஆண்ட்ரூ லோனி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |