இது சாதாரண போட்டியில்ல.. உலகக் கோப்பை! இவரை இந்திய அணியில் சேர்த்தது ஏன்.. யார் இதற்கு பொறுப்பு? சாடிய முன்னாள் தேர்வாளர்
ஹர்திக் பாண்டியாவை டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்த்தது தொடர்பில் முன்னாள் இந்திய தலைமை தேர்வாளர் சந்தீப் பாட்டீல் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து சந்தீப் பாட்டீல் கூறியதாவது, ஹர்திக்கை பிளேயிங் லெவனில் சேர்பது கேப்டன், பயிற்சியாளரை பொறுத்தது மற்றும் அதுகுறித்து பிசிசிஐ-க்கு மட்டும் தான் தெரியும்.
ஆனால், ஒரு வீரர் முழு உடற்தகுதியுடன் இல்லை என்றால், அவரை தேர்வு செய்வது தேர்வாளர்களிடம் தான் உள்ளது.
ஐபிஎல் தொடர் முழுவதும் ஹர்திக் ஒரு பந்து கூட வீசவில்லை என்றால், அது குறித்து தேர்வாளர்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரை சேர்ப்பதற்கு முன் தேர்வாளர்கள் அவரை உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும்.
ஹர்திக்கை அணியில் சேர்த்ததற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள். யாராவது அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஹர்திக் உடற்தகுதியுடன் இருப்பதாக ரோகித் மற்றும் ராகனே கூறினர். அவர் உடற்தகுதியுடன் இருக்கிறார் என எப்படி நீங்கள் சொல்ல முடியும், ஒருவேளை போட்டியின் போது அவர் தகுதியற்றவராகிவிட்டால்? என்ன செய்வது.
இது உலகக் கோப்பை, ஏதோ ஒரு தொடரோ அல்லது போட்டியோ கிடையாது என முன்னாள் இந்திய தலைமை தேர்வாளர் சந்தீப் பாட்டீல் கடுமையாக சாடியுள்ளார்.