இந்திய பேட்ஸ்மேன்கள் மீது முன்னாள் வீரர் கோபம் - ஏன் தெரியுமா?
ரன்கள் எடுக்கிறோம் என்ற பெயரில் எளிதாக விக்கெட்டை இழந்து பேட்ஸ்மேன்கள் இந்திய அணியை தோல்வியில் தள்ளுகிறார்கள் என முன்னாள் வீரர் மதன் லால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் இரண்டையும் இந்திய அணி எதிர்பாராத வகையில் படுதோல்வியை சந்தித்து, இழந்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி மட்டுமே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.
இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் கேள்விக்குறியாக இருந்தது. குறிப்பாக ஒரு விக்கெட் விழுகையில், வரிசையாக மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகளை கொடுத்து அணியை இக்கட்டான சூழலுக்கு தள்ளினர்.
இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய அணியை குறிப்பாக பேட்ஸ்மேன்களை முன்னாள் இந்திய வீரர் மதன்லால் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அதில் இலக்கை அடைந்து வெற்றியை பெற வேண்டும் அல்லது குறிப்பிட்ட இலக்கை கட்டுப்படுத்தி வெற்றி பெற வேண்டுமென இந்திய வீரர்கள் எண்ணி இருந்தாலும், அவர்களது அணுகுமுறை அவ்வளவு ஆர்வமாக இல்லை.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளே வந்து மிகப்பெரிய ஷாட்டுகள் அடிக்க போகிறேன் என்ற பெயரில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து, அணியை இக்கட்டான சூழலுக்கு தள்ளியிருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் இரண்டு தொடர்களிலும் தோல்வியை சந்தித்துள்ளோம்.
மேலும் இனிவரும் போட்டிகளில் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என மதன் லால் அறிவுரை கூறுயுள்ளார்.