உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி சாதித்த முன்னாள் வீரர் மறைவு

Sivaraj
in கிரிக்கெட்Report this article
மும்பை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பத்மகர் ஷிவல்கர் தனது 84வது வயதில் காலமானார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பு
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த முன்னாள் வீரர் பத்மகர் ஷிவல்கர்.
இவர் 124 போட்டிகளில் 589 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.
1960 மற்றும் 70களில் இவர் மும்பை உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை அளித்தார். ஆனால், ஒருமுறைகூட சர்வதேச கிரிக்கெட் விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனினும், ஓய்வு பெற்ற பின்னர் பத்மகர் ஷிவல்கர் மும்பை ரஞ்சி டிராஃபி அணிக்கு பயிற்சியாளராக இருந்தார்.
84வது வயதில்
இந்த நிலையில் பத்மகர் ஷிவல்கர் மும்பையில் உடல்நலக்குறைவால், தனது 84வது வயதில் காலமானார்.
அவரது மறைவுக்கு கவாஸ்கர், வாசிம் ஜாபர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு, உள்நாட்டு போட்டிகளில் அளித்த பங்களிப்பை போற்றும் விதமாக பத்மகர் ஷிவல்கருக்கு "சி.கே.நாயுடு" வாழ்நாள் விருதை வழங்கி பிசிசிஐ கவுரவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |