பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை: எதற்காக தெரியுமா?
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸிக்கு (66) ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, தனக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக செலவிட்டதற்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பிரச்சாரத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த தொகை 19.5 மில்லியன் பவுண்டுகள். ஆனால், அவர் செலவிட்ட தொகையோ 37 மில்லியன் பவுண்டுகள். அதற்குப்பின் அவரது அணியினர் அதை மூடி மறைக்கும் முயற்சியில் இறங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
ஏற்கனவே நீதிபதி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சார்க்கோஸி தற்போது ஜாமினில் இருக்கிறார்.
இந்நிலையில், மீண்டும் அவருக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ட்ராக் செய்யும் எலக்ட்ரானிக் bracelet ஒன்றை காலில் அணிந்துகொண்டு அவர் வீட்டில் இருந்தவண்ணமே தண்டனையை அனுபவிக்கலாம் என நீதிபதி கூறிவிட்டார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு பெருந்தொகை செலவு செய்தும் அந்த தேர்தலில் சார்க்கோஸி தோல்வியடைந்ததுதான்!