ரொனால்டோ தன் ஆணவத்தினால் போர்த்துக்கலை சிதைத்துவிட்டார்! உலக சாம்பியன் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு
உலகக்கோப்பையில் தனது ஆணவத்தினால் போர்த்துக்கல் அணியை ரொனால்டோ சிதைத்துவிட்டதாக ஜேர்மனின் முன்னாள் வீரர் குற்றம்சாட்டியுள்ளார்.
சொதப்பிய ரொனால்டோ
கத்தார் உலகக்கோப்பை தொடரில் போர்த்துக்கல் அணி காலிறுதியில் மொராக்கோவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒட்டுமொத்த தொடரிலும் ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தார்.
அவரது ஆட்டம் ரசிகர்களுக்கே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதனால் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் அமர வைக்கப்பட்டார்.
அந்தப் போட்டியில் போர்த்துக்கல் அணி 6 கோல்கள் அடித்து இமாலய வெற்றி பெற்றது. ரொனால்டோ சுயநலமாக விளையாடுவதாக பரவலாக குற்றச்சாட்டு நிலவியது.
லோதர் மத்தாஸ் குற்றச்சாட்டு
இந்த நிலையில், ரொனால்டோ குறித்து ஜேர்மனி அணியின் முன்னாள் வீரரும், உலகக்கோப்பை சாம்பியனுமான லோதர் மத்தாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், 'ரொனால்டோ ஆணவத்தினால் தன்னையும், அணியையும் சேதப்படுத்தினார். அவர் ஒரு சிறந்த வீரர் மற்றும் ஆட்டத்தை சிறப்பாக முடிப்பதில் வல்லவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இப்போது அவர் தனது பாரம்பரியத்தை சேதப்படுத்திவிட்டார். அவரால் அணியில் ஒரு இடத்தை பிடிக்க முடியும் என்று நான் நினைப்பதே கடினமாக உள்ளது. ரொனால்டோவை நினைத்து வருந்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.
@Reuters
மேலும் அவர், மெஸ்ஸிக்கு நேர்மாறாக உலகக்கோப்பையில் ரொனால்டோ தோல்வியை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார்.