இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலீம் துரானி காலமானார்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானி வயது முதிர்வு காரணமாக தனது 88வது வயதில் காலமானார்.
சலீம் துரானி
சலீம் துரானி தனது சகோதரர் ஜஹாங்கீர் துரானியுடன் குஜராத்தின் ஜாம்நகரில் வசித்து வந்தார். துராணி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு விபத்தில் தொடை எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் இயற்கை மரணமடைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக விளையாடிய துரானி இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1202 ஓட்டங்கள் மற்றும் 75 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ஆபத்தான இடது கை பேட்ஸ்மேன்
அவர் விளையாடிய நாட்களில், துரானி ஆபத்தான இடது கை பேட்ஸ்மேனாக அறியப்பட்டார். 1971ல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா தனது முதல் டெஸ்டில் வெற்றி பெற்றபோது துரானியின் செயல்பாடு முக்கியமானது. துரானி வீசிய 17 ஓவர்களில் 21 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கிளைவ் லாய்ட் மற்றும் கேரி சோபர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
லீம் துரானி டிசம்பர் 11, 1934 அன்று ஆப்கானிஸ்தானின் காபூலில் பிறந்தார். உள்நாட்டு கிரிக்கெட்டில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் சவுராஷ்டிரா அணிகளுக்காக விளையாடியுள்ளார்.