இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மறைவு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக், தனது 78வது வயதில் இயற்கை எய்தினார்.
ரஞ்சிக் கோப்பையை வென்றவர்
1974ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் சுதிர் நாயக் (78). இவர் மும்பை அணியின் கேப்டனாக இருந்து ரஞ்சிக் கோப்பையை வென்று கொடுத்ததுடன், மும்பை கிரிக்கெட் சங்க தெரிவு குழுவின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
பின்னர் வான்கடே மைதானத்தின் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார் சுதிர் நாயக். ஒரு பயிற்சியாளராகவும் செயல்பட்ட சுதிர் நாயக், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுக்கு தேவையான வெளிப்பாடுகளை வழங்கி, அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
மறைவு
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதிர் நாயக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
@ Kind courtesy, North Stand Gang - Wankhede/Twitter
மூன்று டெஸ்ட் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள சுதிர் நாயக், டெஸ்டில் அரைசதம் விளாசியவர்.
எனினும் 85 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 4,500 ஓட்டங்கள் குவித்துள்ளார். அதில் இரட்டை சதம் உட்பட சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.