ட்ரூடோ பதவி விலக வேண்டும்: வெளிப்படையாக களமிறங்கிய கேபினட் அமைச்சர்
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர், கட்சி புதிய தலைவரை கண்டுபிடிக்க வேண்டிய கட்டயத்தில் இருப்பதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் கேத்தரின் மெக்கென்னா
ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி, தாங்கள் வலுவாக உள்ள தொகுதியிலேயே தோல்வியை சந்தித்துள்ள நிலையிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லிபரல் கட்சி ஒருபோதும் ஒருவரை நம்பியிருப்பதில்லை.
அது மதிப்புகளைப் பற்றியது மற்றும் கனடியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது பற்றியது என முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் கேத்தரின் மெக்கென்னா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் ட்ரூடோவுக்கு பெருமைப்பட வேண்டிய ஒரு மரபு உள்ளது, ஆனால் இது புதிய யோசனைகள், புதிய ஆற்றல் மற்றும் புதிய தலைவருக்கான நேரம் என்றும் மெக்கென்னா குறிப்பிட்டுள்ளார்.
ட்ரூடோ அமைச்சரவையில் 2015 முதல் 2021 வரையில் சேவையாற்றியவர் மெக்கென்னா. முதலில் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பின்னர் உள்கட்டமைப்பு அமைச்சராகவும் பதவியில் இருந்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள முதல் முன்னாள் கேபினட் அமைச்சர் மெக்கென்னா. ஆனால் ட்ரூடோவின் தற்போதைய அமைச்சர்கள் பகிரங்கமாக அவருக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.
அரசியல் எதிர்காலம் தொடர்பில்
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் Wayne Long தெரிவிக்கையில், கட்சியின் எதிர்காலம் மற்றும் நமது நாட்டின் நலனுக்காக புதிய தலைமையும் புதிய பாதையும் தேவை என்றார்.
வாக்காளர்கள் மிகத் தெளிவாக புதிய மாற்றம் தேவை என்பதை குறிப்பிட்டுள்ளனர், அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார். இந்த நெருக்கடியான சூழலில், தமது அரசியல் எதிர்காலம் தொடர்பில் ஜஸ்டின் ட்ரூடோ முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தற்போது தள்ளப்பட்டுள்ளார்.
திங்களன்று நடந்த இடைத்தேர்தலில், நீண்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் கன்சர்வேட்டிவ் கட்சி Toronto-St. Paul’s தொகுதியை கைப்பற்றியுள்ளது. இது கட்சியில் தலைமை பொறுப்பில் ட்ரூடோ நீடிக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |