சாலையின் சுவரில் மோதி நொறுங்கிய கார்! முன்னாள் MPயின் மனைவி பலி..தந்தையுடன் உயிர்தப்பிய மகன்
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் நடந்த கார் விபத்தில் முன்னாள் அமைச்சரின் மருமகள் பலியானார்.
முன்னாள் MP
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரின் மகனும், முன்னாள் MPயுமான மன்வேந்திர சிங் தனது குடும்பத்துடன் காரில் பயணித்துள்ளார்.
அவர்கள் சென்ற கார் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் நவுகாவா எனும் ஊரின் அருகே சென்றபோது, உயர்மட்ட சாலையின் நடுவில் உள்ள சிமெண்ட் சுவரின் மீது மோதியது.
கார் நொறுங்கி விபத்திற்குள்ளானதில் மன்வேந்திர சிங், அவரது மனைவி சித்ரா சிங், மகன் ஹமிர் சிங் மற்றும் ஓட்டுநர் என நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
சிகிச்சை பலனின்றி பலி
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா சிங் உயிரிழந்தனர். இந்த நிலையில், முன்னாள் MP மன்வேந்திர சிங்கின் உடல்நிலை அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது மகனும், ஓட்டுனரும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மன்வேந்திர சிங்கின் மனைவியின் இறப்புக்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |