விஷம் கொடுத்து என்னை கொல்ல சதி நடந்தது... - முன்னாள் பாக். வீரர் இம்ரான் நசீர் கதறல்...!
விஷம் கொடுத்து என்னை கொல்ல சதி நடந்தது என்று முன்னாள் பாக். வீரர் இம்ரான் நசீர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்றாலே பல சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது. 2007ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. அப்போது, ஹோட்டல் அறையில் அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்னும் அந்த மர்மம் குறித்த உண்மையான தகவல் வெளியாகவில்லை.
இம்ரான் நசீர்
பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரர் இம்ரான் நசீரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. 2007 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இம்ரான் நசீர் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அவர் தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் இடம் பெறாமல் போனார்.
விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் இம்ரான் நசீர் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். ஒரு சேனலுக்கு அவர் பேட்டி அளிக்கும்போது பல திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில்,
பாகிஸ்தான் அணிக்காக 79 ஒரு நாள் மற்றும் 8 டெஸ்ட் போட்டிகளில் இம்ரான் நசீர் விளையாடி இருக்கிறேன். திடீரென்று என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது நான் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அப்போது என்னுடைய மருத்துவ அறிக்கையை பார்த்த எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த மருத்துவமனை அறிக்கையில் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
யாரோ மெர்குரி திரவத்தை என்னுடைய உணவில் கலந்து கொடுத்துள்ளனர். இதனால், கொஞ்சம் கொஞ்சமாக என் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. என் எலும்பு முட்டுகள் எல்லாம் பாதிக்கப்பட்டன. இந்த நோயால் நான் 6 ஆண்டுகாலம் அவதிப்பட்டேன். எனக்கு அப்போது பயம் வந்தது. நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். நான் படுத்த படுக்கையாக ஆகிவிடக்கூடாது என்று. நான் யாருக்கும் தீங்கு நினைக்கவில்லை.
என்னிடம் இருந்த பணம் எல்லாம் தீர்ந்து போய்விட்டது. அந்த சமயத்தில் எனக்கு அப்ரிடிதான் உதவி செய்தார். அவருக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. மருத்துவ செலவுக்காக எனக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார். கிட்டத்தட்ட ரூ.40 லட்சம் வரை அவர் செலவு செய்துள்ளார். என் மருத்துவரும் சிகிச்சைக்குத் தேவையான பணத்தை மட்டுமே வாங்கினார் என்றார்.
Former Pakistan opener, Imran Nazir, has recently shared a chilling story about how he was poisoned at the peak of his career.
— Startup Pakistan (@PakStartup) March 24, 2023
. pic.twitter.com/A9Wr5ebwcd