பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இருந்து மான்செஸ்டர் வீரரை விடுவித்த இங்கிலாந்து நீதிமன்றம்
மான்செஸ்டர் சிட்டியின் முன்னாள் வீரர் பெஞ்சமின் மெண்டி துஷ்பிரயோக வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் மான்செஸ்டர் சிட்டி வீரர்
கடந்த சனவரி மாதம் மான்செஸ்டர் சிட்டி அணியின் முன்னாள் வீரரும், பிரான்ஸை சேர்ந்த பெஞ்சமின் மெண்டி மீது ஆறு துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றம்சாட்டப்பட்டு, பின் அவர் குற்றவாளி இல்லை என கண்டறியப்பட்டது.
ஆனால், அந்த நேரத்தில் நீதிபதிகள் இரண்டு குற்றச்சாட்டுகளை முடிவு செய்ய தவறிவிட்டனர் என்பதால் இரண்டாவது விசாரணைக்கு சென்றது.
Andy Kelvin / Kelvinmedia
இந்த நிலையில் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில், பெஞ்சமின் மெண்டி முந்தைய நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தீர்மானிக்கப்படாத இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து, அவரது இரண்டாவது விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மெண்டி தனது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப தனியுரிமை கோரியுள்ளார்.
Getty
வினி ஜூனியர் ஆதரவு
இந்நிலையில், பிரேசில் வீரரான வினி ஜூனியர் வெளியிட்டுள்ள பதிவில், 'நீங்கள் அனுபவித்த அனைத்திற்கும் நான் வருந்துகிறேன். உங்கள் வாழ்வில் 2 ஆண்டுகளை நீங்கள் இழந்துவிட்டீர்கள்.
நிச்சயமாக உங்கள் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது. நற்பெயரை அழிக்கும் கலாச்சாரம் மேலும் ஒருவரை பலியாக்கிவிட்டது. இந்த விடுமுறை நாட்களில் நான் தனிப்பட்ட முறையில் இதனை மிகவும் உணர்ந்தேன்' என அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
Getty Images