ராணுவ வீரர்கள் வீர மரணமடைகின்றனர்! சாம்பியன் டிராபி நடக்காது - முன்னாள் வீரர்
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறாது என முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் செல்லுமா இந்திய அணி?
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உட்பட 8 அணிகள் பங்கேற்க உள்ளன.
ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
இந்தியா வரவில்லை என்றால் அவர்களை புறக்கணித்துவிட்டு போட்டி தொடர் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.
பாசித் அலி
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு பிரச்சனைகளை சரி செய்யவில்லை என முன்னாள் வீரர் பாசித் அலி (Basit Ali) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "நாம் பாதுகாப்புக்கு கவனம் கொடுக்க வேண்டும். இந்த சுற்றுப்பயணங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி கண்டிப்பாக இங்கு நடக்காது.
ஆனால் பலூசிஸ்தானிலும், பெஷாவரிலும் நமது ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்து வருகின்றனர். அது ஏன் நடக்கிறது என்பதற்கு அரசாங்கம் மட்டுமே பதில் கூற முடியும். இந்த நேரத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறு விடயங்கள் நடந்தால் கூட, சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்காது" என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |