இது இங்கிலாந்து செய்த பைத்தியக்காரத்தனம்! முன்னாள் வீரர் கூறிய கருத்து
முதல் நாளிலேயே இங்கிலாந்து டிக்ளேர் செய்ததை முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டி
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டி, பே ஓவல் மைதானத்தில் தொடங்கியது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 58.2 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 325 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 89 ஓட்டங்களும், டக்டெக் 84 ஓட்டங்களும் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் வாக்னர் 4 விக்கெட்டுகளும், சௌதீ மற்றும் குஃகெலேஜின் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
insidesport.in
@englandcricket
பிராட் ஹாக் கருத்து
இந்த நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக், இங்கிலாந்து அணி முதல் நாளில் ஓவர்கள் மீதமுள்ள நிலையில் டிக்ளேர் செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், 'முதல் நாளில் 25 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் டிக்ளேர் செய்வது பைத்தியக்காரத்தனம்! இது பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதற்கான வழி. விளக்குகளின் கீழ் பந்துவீசும்போது ஆரஞ்சு நிற பந்து அதிகமாக நகரும். மேலும் ஓட்டங்கள் வேகமாக போர்டில் இருக்கும். இங்கிலாந்து டெஸ்ட் வடிவத்தை முன்னெடுத்துச் செல்கிறது' என தெரிவித்துள்ளார்.
Declare on day one with 25 overs left on day one, madness!
— Brad Hogg (@Brad_Hogg) February 16, 2023
Way to play day night test cricket. Runs on the board as quick as possible and bowl under lights when the orange ball moves the most. England are taking the test format forward. #NZvENG
@Getty Images