வீடற்ற ஒருவரை முதுகில் சுட்ட காவலர்: வெடித்த போராட்டம்..கொலை குற்றச்சாட்டு
அமெரிக்காவில் வீடற்ற ஒருவரை சுட்டுக் கொன்றதாக முன்னாள் காவலர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது.
முதுகில் சுட்ட முன்னாள் காவலர்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிளிஃபோர்ட் ப்ரோக்டர் (60) என்ற காவலர், 2015ஆம் ஆண்டு பணியில் இருந்தபோது பிரெண்டன் க்ளென் என்பவரின் முதுகில் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார்.
இதில் அவர் உயிரிழக்க லாஸ் ஏஞ்சல்ஸில் தொடர்ச்சியான போராட்டங்களைத் தூண்டியது. காவல்துறையின் மிருகத்தனத்திற்கு எதிராகப் பேசிய மக்கள், க்ளெனினுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுச் சின்னங்களை அமைத்தனர்.
க்ளெனின் குடும்பத்தினர் அவரது மரணம் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தனர். அப்போது காவல்துறைத் தலைவரான கிளிஃபோர்ட் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 
நிரூபிக்க முடியவில்லை
எனினும், அதிகாரி கிளிஃபோர்ட் அன்றிரவு சட்டவிரோதமாக நடந்து கொண்டதை நிரூபிக்க முடியவில்லை என்று லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் கூறியது.
மேலும், 2018ஆம் ஆண்டில் அப்போதைய மாவட்ட வழக்கறிஞர் ஜாக்கி லெஸியின் கீழ் 83 பக்க அறிக்கையை வெளியிட்டது.
அதில் கிளிஃபோர்ட், கொடிய சக்தியைப் பயன்படுத்தியபோது சட்டவிரோதமாக செயல்பட்டார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது என கூறப்பட்டது. 
தற்போது அவர் மீதான குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளதால், மாவட்ட வழக்கறிஞர் நாதன் ஜே.ஹோச்மேன் வழக்கை மறுபரிசீலனை செய்வார்.
கொலைக் குற்றச்சாட்டு
மேலும், வழக்குத் தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து பின்னர் முடிவெடுப்பார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் கிளிஃபோர்ட் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
கிளிஃபோர்ட் 2017யில் தனது பதவியில் இருந்து விலகினார். கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |