பிரித்தானியாவில் குழந்தைகள் தொடர்பில் கைதான திருநங்கை.. ஆண், பெண் எந்த சிறையில் அடைப்பது? குழப்பத்தால் அசாதாரண முடிவு
பிரித்தானியாவில் குழந்தைகளின் அநாகரீக புகைப்படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட திருநங்கை மீதான தண்டனை பாலினத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் சிறை ஊழியர்
Norfolkயில் தன்யா ஹோவ்ஸ் (66) எனும் முன்னாள் சிறை ஊழியரான திருநங்கை, கடந்த 2020ஆம் ஆண்டில் குழந்தைகளின் அநாகரீகமான படங்களை வைத்திருந்ததாக மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டால் எந்த சிறையில் அடைப்பது என்ற கேள்வி எழும்பியது.
தண்டனை இடைநிறுத்தம்
அதாவது, திருநங்கை என்பதால் அவரை ஆண் சிறையில் அடைப்பதா அல்லது பெண் சிறையில் அடைப்பதா என்ற குழப்பம் நீடித்தது. இதன் காரணமாக உண்டான விவாதங்கள் அவரது வழக்கை தாமதப்படுத்தியது.
இந்த நிலையில் ஹோவ்ஸின் 12 மாத சிறை தண்டனையை இடைநிறுத்துவதற்கான அசாதாரண முடிவை நீதிபதிகள் எடுத்துள்ளனர்.
இதற்கிடையில், 30 நாட்கள் வரை மறுவாழ்வு நடவடிக்கை தேவை என்றும், 145 பவுண்ட் செலவுகள் மற்றும் 149 பவுண்ட் பாதிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் செலுத்தவும் ஹோவ்ஸுக்கு உத்தரவிடப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |