இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் காலமானார்
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் விஜய மலலசேகர காலமானார்.
77 வயதான விஜய மலலசேகர இன்று காலை இயற்கை எய்தினார்.
விஜய மலலசேகர 2001- 2002 காலத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக திகழ்ந்தார்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக விஜய் மலலசேகர பதவி வகித்த காலத்தில், இலங்கை தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
விஜய மலலசேகர Ceylon Tobacco-வில் 39 வருடங்கள் சேவையாற்றினார்.
அவர் போகலா கிராஃபைட் மற்றும் ஆசிய பருத்தி ஆலைகளின் தலைவராகவும் பணியாற்றினார்.
விஜய மலலசேகர மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.
Former Sri Lanka Cricket Chairman Vijaya Malalasekara (77) passed away this morning (05). https://t.co/meCH60OMgx
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 5, 2022
RIP ? pic.twitter.com/h6ne6fx0kw