சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி செய்த செயல்: வெளியான புகைப்படத்தால் சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் அரசுக்குத் தெரியாமல் செய்த ஒரு செயல், சுவிட்சர்லாந்தில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
வெளியான புகைப்படம் உருவாக்கியுள்ள சர்ச்சை
சுவிஸ் முன்னாள் ஜனாதிபதியான Ueli Maurer, சீன தூதரை சந்திக்கும் புகைப்படம் ஒன்றை சீன தூதரகம் வெளியிட்டது. அந்த புகைப்படம்தான் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சீன தூதரும் Ueli Maurerம், இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார, தொழில்துறை ஒத்துழைப்பு தொடர்பில் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chinese Embassy in Bern
இதில் என்ன தவறு?
விடயம் என்னவென்றால், Ueli Maurer, 2013 முதல் 2019 வரை சுவிஸ் ஜனாதிபதியாகவும், 2009 முதல் 2022 வரை சுவிஸ் பெடரல் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தார். அதாவது, அவருடைய பதவிக்காலம் கடந்த ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது.
ஆகவே, பதவியில் இல்லாத ஒருவர், மற்றொரு நாட்டுடன் அரசு விடயங்கள் எதையும் விவாதிக்கக்கூடாது.
அத்துடன், அந்த சந்திப்பு அரசுக்குத் தெரியாமலும், வெளியுறவு அமைச்சகத்துக்குத் தெரியாமலும் நடைபெற்றுள்ளது.
ஆக, Ueli Maurer பதவிக்காலம் முடிவடைந்த பின்பு, அரசுக்குத் தெரியாமல் சீன தூதரை சந்தித்ததே சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.