10 ஆண்டுகள் அனுபவம்... வேலையை விட்டு தூக்கிய எலோன் மஸ்க்: ரூ 5 கோடி இழப்பீடு வழங்கிய நிறுவனம்
டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய உரிமையாளராக பொறுப்பேற்றுக்கொண்ட எலோன் மஸ்க், அனுபவம் மிகுந்த ஊழியர் ஒருவரை நீக்கி, பின்னர் இழப்பீடு வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
தீவிரமாக பல மணி நேரம் வேலை
கடந்த 2022ல் டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய உரிமையாளராக பொறுப்புக்கு வந்த எலோன் மஸ்க், டுவிட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் மின் அஞ்சல் ஒன்றை அனுப்பினார்.
அதில் மிகவும் தீவிரமாக பல மணி நேரம் வேலை பார்க்க ஒப்புக்கொள்பவர்கள் மட்டும் வேலையில் நீடிக்கலாம் என்றும் அல்லது குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு ராஜினாமா செய்துகொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது டுவிட்டர் டப்ளின் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த, 10 ஆண்டுகள் டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி அனுபவம் கொண்ட Gary Rooney என்பவருக்கு தெரியவில்லை, அந்த மின் அஞ்சலானது நீதிமன்ற போராட்டத்திற்கு இட்டுச்செல்லும் என்பது.
எலோன் மஸ்க் அனுப்பிய மின் அஞ்சலுக்கு சரி என Gary Rooney பதிலளிக்கவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு டுவிட்டர் நிறுவனத்தின் மனிதவள துறையில் இருந்து இன்னொரு மின் அஞ்சல் வந்துள்ளது.
பணியிட உறவுகள் ஆணையம்
அதில் Rooney பதிலளிக்க தவறியதால், ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாக நிறுவனம் கருதுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் Rooney உண்மையில் ராஜினாமா செய்யவில்லை.
இதனையடுத்து அயர்லாந்தின் பணியிட உறவுகள் ஆணையத்தை நாடிய Rooney தம்மை நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்தாக முறையிட்டார். மேலும், மஸ்க் மின் அஞ்சல் அனுப்பிய நாளில் தமது சக ஊழியர்கள் சிலரிடம் தாம் இதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக Slack-ல் தகவல் அனுப்பியுள்ளார்.
அதையே டுவிட்டர் நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்துள்ளது. இறுதியில் டுவிட்டர் நிறுவனம் 600,000 டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 5 கோடி) இழப்பீடு வழங்க உத்தரவானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |