முன்பு கொரோனா மையமாக இருந்த கனேடிய நகரம்.... பயங்கரமான மூன்றாவது அலையை தவிர்த்தது எப்படி?
முன்பு கனடாவின் கொரோனா மையமாக இருந்த மொன்றியல் நகரம் பயங்கரமான கொரோனாவின் மூன்றாவது அலையை வெற்றிகரமாக தவிர்த்துள்ளது.
எப்படி? வழக்கமாக என்னவெல்லாம் செய்வோமோ, அனைத்தையும் மாற்றினோம் என்கிறார் மொன்றியல் பொது சுகாதார துறையைச் சேர்ந்த Dr. Sarah-Amélie Mercure.
முதல் திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கியூபெக்கில் கண்டறியப்பட்டதுமே, அது வேகமாகப் பரவக்கூடியது என்பது தெரியவந்ததும் நடவடிக்கையைத் துவக்கியது Dr. Sarahவின் குழு.
முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தினார் Dr. Sarah, தொற்றுடையவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை விரைந்து கண்டறிதல், விரைவான ஆய்வக முடிவுகள் மூலம் திடீர் மாற்றம் பெற்ற வைரஸ்களை கண்டறிதல், ஒரு திடீர் மாற்றம் பெற்ற வைரஸ் கண்டறியப்பட்டதும் பள்ளிகளையும் அலுவலகங்களையும் உடனடியாக மூடுதல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்துதல்... என அத்தனை விடயங்களையும் சரியான நேரத்தில் செயல்படுத்தினார் Dr. Sarah.
எல்லாவற்றையும் விட முக்கிய விடயம், மக்கள் அத்தனை விடயத்திற்கும் ஒத்துழைப்பு கொடுத்ததுதான்.
விதிக்கப்பட்ட அத்தனை கட்டுப்பாடுகளுக்கும் மக்கள் கட்டுப்பட, இன்று
பக்கத்திலுள்ள மற்ற நகரங்களைவிட சிறப்பாக மூன்றாவது கொரோனா அலையை
எதிர்கொண்டுள்ளது மொன்றியல்.
எல்லாவாற்றிற்கும் காரணம், வழக்கமாக என்னவெல்லாம் செய்வோமோ, அனைத்தையும்
நாங்கள் மாற்றியதுதான் என்கிறார் Dr. Sarah.