ரூட் 2, பட்லர் 4.,இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த வீரர்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹாரி புரூக் அதிரடி அரைசதம் அடித்தார்.
சரித்த ஃபௌக்ஸ்
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.
ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஜேமி ஸ்மித் கோல்டன் டக் ஆனார். பின்னர் களமிறங்கிய பென் டக்கெட் (2), ஜோ ரூட் (2), பெத்தேல் (2) ஆகியோர் அடுத்தடுத்து ஸகாரி ஃபௌக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஜோஸ் பட்லரை 4 ஓட்டங்களில் ஹென்றி வெளியேற்ற, சாம் கர்ரன் 6 ஓட்டங்களில் ஸகாரி ஃபௌக்ஸ் (Zakary Foulkes) ஓவரில் அவுட் ஆனார்.
ஹாரி புரூக் அதிரடி
இதனால் இங்கிலாந்து அணி 56 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கைகோர்த்த அணித்தலைவர் ஹாரி புரூக், ஜேமி ஓவர்டன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஹாரி புரூக் (Harry Brook) 37 பந்துகளில் அரைசதம் விளாச, ஜேமி ஓவர்ட்டன் (Jamie Overton) 46 (54) ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
26 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் எடுத்துள்ளது. புரூக் 68 (61) ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |