அறை எங்கும் ரத்தம்... லண்டன் ஹொட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் தம்பதி
லண்டனில் பிரபல ஹொட்டல் ஒன்றில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தம்பதி தொடர்பில் பொலிசார் விசாரணை துவங்கியுள்ளனர்.
வடக்கு யார்க்ஷயர், ஹாரோகேட்டில் உள்ள ஹில்டன் ஹொட்டலிலேயே 29 வயதான செனிஸ் கிரிகோரி மற்றும் அவரது காதலர் மைக்கேல் மெக்கிபன் ஆகிய இருவரையும் செவ்வாயன்று சடலமாக மீட்கப்பட்டனர்.
லண்டனை சேர்ந்த இருவரும் சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாக மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கிரிகோரி கொல்லப்பட்டிருக்கலாம் என்றே முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த விவகாரத்தில் மூன்றாவது நபருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பில்லை எனவும் பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர். கொலைக்கு காரணமான சூழல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக வடக்கு யார்க்ஷயர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதுவரையான விசாரணையில், இச்சம்பவம் கொலை மற்றும் தற்கொலை என்றே தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் உடற்கூராய்வில், கத்திக்குத்து காயங்களால் இருவரும் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிரிகோரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை என்றே பொலிசார் கூறுகின்றனர்.