ஆயுள் வரையில்... சொந்த மகள்களை கொன்ற தாயாருக்கு நீதிமன்றம் அளித்த விசித்திர தண்டனை
அவுஸ்திரேலியாவில் சொந்த மகள்கள் இருவரை கொலை செய்த தாயாரை ஆயுள் வரையில் மருத்துவமனையில் சிறைவைக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் பெர்த் பகுதியை சேர்ந்த 40 வயது Milka Djurasovic என்பவருக்கே, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றம் மருத்துவமனையில் சிறைவைப்பு என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர், தமது இரு பிள்ளைகளான Mia(10), மற்றும் Tiana(6) ஆகிய இருவரையும் கடந்த 2019 அக்டோபர் மாதம் கொலை செய்துள்ளார்.
தமது பிள்ளைகள் இருவர் மீதான அதீத அக்கறை காரணமாகவே, கொலை செய்யும் முடிவுக்கு அவர் வந்துள்ளதாகவும், அதன் பின்னர் பலமுறை தற்கொலை செய்துள்ள முயன்றும் அதில் அவர் வெற்றிபெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
சிறுமிகள் இருவரையும் கொலை செய்வதற்கும் ஓராண்டுக்கு முன்னரே, குறித்த தாயார் உளவியல் பாதிப்புக்கு இலக்கானார் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, Milka Djurasovic தூங்கியே பொழுதைக்கழித்ததாகவும், குடும்பத்தினரிடம் இருந்து விலகியே இருந்து வந்துள்ளதாகவும், ஒருகட்டத்தில் தாம் உளவியல் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டால், அதிக மருந்து அளிக்கப்பட்டு, தாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படலாம் என்ற கவலையை தமது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இது அவரது பிள்ளைகள் இருவரால் பின்னர் கிண்டல் செய்யும் நிலைக்கு சென்றுள்ளது. இருப்பினும் அவரது குடும்பத்தினர் உளவியல் மருத்துவரின் ஆலோசனையை பெற ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒருகட்டத்தில் கடும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்த அவர், தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் கவலை கொண்டுள்ளார். இதனையடுத்தே, அவர்களை கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று. 2019 அக்டோபர் 25ம் திகதி தமது மகள்கள் இருவரையும் கொன்றுவிட்டு, காணொளி ஒன்றை பதிவு செய்து, அதில் மன்னிப்பும் கேட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆனால் பொலிசாரால் Milka Djurasovic மீட்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் உண்மையில் சுயநினைவுடன் அந்த கொலைகளை அவர் செய்திருக்கவில்லை என உறுதி செய்துள்ள நீதிமன்றம், அவரை ஆயுள் அவரையில் உளவியல் காப்பகத்தில் சிறைவைக்க தீர்ப்பளித்துள்ளது.