சுவிட்சர்லாந்தில் குழந்தைகளை அச்சுறுத்தும் ஒரு நீரூற்று: சுவாரஸ்ய பின்னணி
சுவிட்சர்லாந்தில் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ள ஒரு நீரூற்றைக் குறித்து பல கதைகள் கூறப்படுகின்றன.
குழந்தைகளை அச்சுறுத்தும் ஒரு நீரூற்று
சுவிட்சர்லாந்தின் Bern நகரில், Kornhausplatz என்னுமிடத்தில் ஒரு நீரூற்று அமைந்துள்ளது. அந்த நீரூற்றின் நடுவில், குழந்தைகளைப் பிடித்து பையில் அடைத்துவைத்துள்ள ஒரு ராட்சதன், ஒரு குழந்தையை விழுங்குவதுபோல் அமைக்கப்பட்டுள்ள சிலையைக் கண்டால் சிறுபிள்ளைகள் நிச்சயம் பயப்படுவார்கள்.

இந்த நீரூற்றைக் குறித்து பல கதைகள் கூறப்படுகின்றன.
பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக வளரவேண்டும் என்ற நோக்கில், தீய செயல்களில் ஈடுபடும் பிள்ளைகளை பயமுறுத்துவதற்காக அந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் சிலர்.

கிரேக்கக் கடவுளான Kronos, ஒரு நாள் தன் பிள்ளைகள் தன் பதவியைப் பறித்துக்கொள்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் என்பதால் அவர்களைக் கொல்லமுடியாமல், தனக்குப் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் விழுங்கிவிடுவதாக ஒரு கதை கூறப்படுகிறது.
உண்மை என்னவாக இருந்தாலும், சுவிஸ் பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக இல்லாவிட்டால் அவர்களுக்கு ஆபத்து என அந்த சிலை கூறுவதாகவே அதை எடுத்துக்கொள்வது பிள்ளைகளுக்கு நல்லதுதானே என்கிறார்கள் சிலர்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |