பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாரத்தில் நான்கு நாட்கள் வேலை திட்டம்: பிரித்தானியாவில் சோதனை முறையில் துவக்கம்
பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள, ’வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை’ திட்டம் பிரித்தானியாவில் சோதனை முறையில் துவக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில், பிரித்தானியாவிலுள்ள 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 3,300 பணியாளர்கள் பங்குபெறுகிறார்கள்.
திங்கட்கிழமை துவங்கிய இந்த திட்டத்தில், பிரித்தானிய பொருளாதாரத்தில் பங்கு வகிக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த, பிரித்தானியா முழுவதிலுமுள்ள, ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பங்கேற்கிறார்கள்.
அவர்கள், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணி செய்வார்கள், ஆனால், முழு ஊதியமும் அவர்களுக்கு வழங்கப்படும்.
பணியாளர்களின் மன நலன் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தி, முன்னேறும் உலகில் அவர்களுடைய வாழ்வை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அயர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 7,000 பணியாளர்கள், 2022 இறுதி வரை நடைபெற உள்ள இந்த சோதனை முயற்சியில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.