இலங்கையர் நால்வரை பலிவாங்கிய கடலில் மிதந்து வந்த போத்தல்: ஆபத்தான நிலையில் இருவர்
கடலில் மிதந்து வந்த மர்ம போத்தலை ருசி பார்த்த இலங்கை மீனவர்கள் நால்வர் மரணமடைந்ததுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மர்ம போத்தல்கள்
தங்காலையில் இருந்து சுமார் 320 கடல் மைல்களுக்கு அப்பால் அந்த மர்ம போத்தல்களை மீனவர்கள் மீட்டுள்ளனர். அந்த போத்தல்களில் மது இருப்பதாக நினைத்து மீனவர்கள் அருந்தியதாக இலங்கை கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குள் நடந்த இந்த துயர சம்பவத்தில், தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற கடற்படை, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு கரை திரும்பியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பானம் தொடர்பில் ஆய்வு
மேலும், கடலுக்குள் முதலுதவி அளிக்கப்பட்டும், உடனடியாக கரைக்கு திரும்பி உரிய சிகிச்சைக்கு அவர்களை உட்படுத்த முடியாத நிலையில் அவர்கள் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அதானாலையே நால்வர் மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, தங்களுக்கு கிடைத்த போத்தல்களில் சிலவற்றை அப்பகுதியில் காணப்பட்ட சக மீனவர்களுக்கும் அளித்துள்ளனர். தற்போது அந்த போத்தல்களில் இருந்த பானம் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |