செவ்வாய் கிரகத்தில் வசிக்க போகும் நான்கு மனிதர்கள்! ஆனால் ஒரே ஒரு டுவிஸ்ட்
செவ்வாய் கிரகத்தில் 45 நாட்களுக்கு வசிக்க போகும் நான்கு மனிதர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் 4 பேர்
நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட குழுவினர் 45 நாட்களுக்கு எல்லாவற்றையும் விட்டுச் சென்று செவ்வாய் கிரகத்தில் வாழ்வார்கள். இருப்பினும், இவர்களின் செவ்வாய் வீடு பூமியில் தான் உள்ளது.
நான்கு தன்னார்வலர்களும் நாசாவின் மனித ஆய்வு ஆராய்ச்சி அனலாக் (Nasa's Human Exploration Research Analog) பணியின் ஒரு பகுதியாக உள்ளனர்.
ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் (Nasa's Johnson Space Center) செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு வாழ்விடம் தயாராகியுள்ளது.
நான்கு தன்னார்வலர்களில் ஜேசன் லீ (Jason Lee), ஸ்டீஃபனி நவரோ (Stephanie Navarro), ஷரீஃப் அல் ரொமைதி (Shareef Al Romaithi) மற்றும் பியுமி விஜேசேகர (Piyumi Wijesekara) ஆகியோர் அடங்குவர்.
அவர்கள் செவ்வாய் வாழ்விடத்திற்குள் நுழையும்போது அவர்களின் பணி மே 10 -ம் திகதி தொடங்கி ஜூன் 24 -ம் திகதி பூமிக்கு 'திரும்பும்போது' முடிவடையும்.
ஆய்வு
இந்த தனிமைப்படுத்துதலை விஞ்ஞானிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்று இந்த திட்டமானது ஆய்வு செய்யவிருக்கிறது.
Jason Lee
அதேபோல, நாசா விண்வெளி வீரர்களை சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் ஆழமான விண்வெளிப் பயணங்களுக்கு அனுப்புவதற்கு முன்பு, மனிதர்களை இதுபோன்ற வாழ்விடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யும்.
45 நாள் நீண்ட பயணத்தின் போது, செவ்வாய் பரப்பினை ஆய்வு செய்வது, நடந்து பார்ப்பது மற்றும் செயல்பாட்டு பணிகளை குழுவினர் மேற்கொள்வார்கள்.
Stephanie Navarro
இதில் விர்ச்சுவல் ரியாலிட்டியைப் (virtual reality) பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் "நடப்பது" அடங்கும்.
அவர்கள் செவ்வாய் கிரகத்திற்கு அருகில் இருக்கும் போது மிஷன் கண்ட்ரோல் சென்டரில் (Mission Control Center) ஒவ்வொரு வழியிலும் தொடர்பு கொள்வதில் ஐந்து நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்த தகவல்தொடர்பு தாமதங்களை அவர்கள் எதிர்கொள்வார்கள்.
Shareef Al Romaithi
பூமியில் இருக்கும் மார்டியன் உலகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்திற்குள் நுழைந்த இரண்டாவது குழு இதுவாகும். அண்மையில் முதல் குழுவினர் இந்த பணியை மார்ச் 18 -ம் திகதி முடித்தனர்.
இந்த ஆண்டு மற்ற இரண்டு பணிகள் தொடரும். தன்னார்வலர்களில் ஒருவரான ஜேசன் லீ (Jason Lee) கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் (University of Connecticut) இணைப் பேராசிரியராக உள்ளார்.
மேலும், UC Berkeley மற்றும் MIT போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் பட்டம் பெற்று வெப்ப திரவங்களில் நிபுணராக உள்ளார். இவரது ஆராய்ச்சியானது உற்பத்தி மற்றும் வெப்ப பரிமாற்றத்தை ஆராய்கிறது.
ஸ்டீஃபனி நவரோ (Stephanie Navarro), விண்வெளி நடவடிக்கை அதிகாரி மற்றும் அனுபவம் வாய்ந்த பொறியாளர் ஆவார். இவர், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு திட்டங்களில் சிறந்து விளங்குகிறார்.
Piyumi Wijesekara
அபுதாபியைச் சேர்ந்த முன்னோடி விமானியான ஷரீஃப் அல் ரொமைதி (Shareef Al Romaithi) 16 ஆண்டுகளுக்கும் மேலான விமானப் போக்குவரத்தில் இணையற்ற நிபுணத்துவம் பெற்றவர். இவர், பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.
நாசாவின் முதுகலை விஞ்ஞானியான பியுமி விஜேசேகர (Piyumi Wijesekara) விண்வெளியில் இருக்கும் போது மனித உடலில் ஏற்படும் தாக்கத்தில் இருந்து விடுபட வைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |