நான்கில் ஒரு பொலிசார் தற்கொலை மனநிலையில் இருக்கின்றனர்! எந்த நாட்டில் தெரியுமா?
பிரான்சில் நான்கில் ஒரு பொலிசார் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு நாட்டிலும், மிகவும் மரியாதையுடன் பார்க்கப்படுவர்கள் தான் பொலிசார். நாட்டில் வன்முறை என்றாலும் சரி, ஒரு திருவிழாக்கள் என்றாலும் சரி, எதுவாக இருந்தாலும் பொலிசாரின் பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது.
அரசாங்க விடுமுறை நாட்களில் கூட, வீட்டிற்கு செல்லாமல், பணி செய்வதும் உண்டு. எந்த ஒரு அவசர சூழ்நிலையில் அழைத்தாலும் வர வேண்டும். அப்படிப்பட்ட காவல்துறையினர், நான்கில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருக்கின்றனர்.
பிரான்சில், இந்த ஆண்டின் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் சுமார் 6,000 காவல்துறை அதிகாரிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதில், நான்கில் ஒருவர் அதாவது 25 சதவீதமான காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருப்பதும்,
அதேவேளை, 40 சதவீதமான அதிகாரிகள் தீவிர மன அழுத்தத்தில் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில், பிரான்சில் 1,100 பொலிசார் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 16 அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.