அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் துப்பாக்கிச்சூடு! 18 வயது சிறுவன் மற்றும் இளம்பெண் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி..உயிர்தப்பிய குழந்தை
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு
வடமேற்கு டல்லாஸில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அண்டை வீட்டார் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த பொலிஸார், நான்கு பேர் உயிரிழந்து கிடந்ததை கண்டனர்.
பின்னர் அவர்களின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்ட்டெமியோ மால்டோனாடோ என்ற 18 வயது இளைஞரும், அசுசீனா சான்செஸ் என்ற 20 வயது இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து சில மணிநேரங்களில் நார்த்ஹேவன் சாலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை தொடர்பில் தகராறு
முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் காதலி அசுசீனா என்றும், குழந்தை தொடர்பான தகராறில் அவர்கள் இருந்ததாகவும் தெரிய வந்தது.
மால்டோனாடோ, அசுசீனா தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். ஆனால் அவர்கள் சார்பாக வாதிட ஒரு வழக்கறிஞர் இருக்கிறாரா என்பது தெளிவாக இல்லை.
இந்த சம்பவத்தில் குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பியது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை பெண்ணொருவர் அவரது 11 வயது மகனுடன், முன்னாள் காதலனால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.