கோட்டாபய முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் புதிதாக 4 அமைச்சர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் 4 பேரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் வரை தற்காலிக நடவடிக்கையாக நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அரசாங்கத்தின் மூத்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
உக்ரேனிய மேயரை குடும்பத்துடன் கொன்று குழியில் வீசிய ரஷ்யா துருப்புகள்! வெளியான புகைப்படம்
தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு அமைச்சர்களின் விவரம்:
- அலி சப்ரி - நிதி அமைச்சர்
- தினேஷ் குணவர்தன - கல்வி அமைச்சர்
- பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் - வெளிவிவகார அமைச்சர்
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - நெடுஞ்சாலைகள் அமைச்சர்
பசில் ராஜபக்ஷவுக்கு பதிலாக அலி சப்ரி புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற மூவரும் ஏற்கனவே அந்தந்த துறை அமைச்சர்களாக செயல்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதி அமைச்சராக செயல்பட்டு வந்த அலி சப்ரி, தற்போது நிதியமைச்சராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.