அரை மணி நேரத்தில் 30 கிலோ ஆரஞ்சு பழத்தை மொத்தமாக தின்று தீர்த்த நால்வர்: சுவாரசிய காரணம்
விமானத்தில் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும் என்பதால் 30 கிலோ ஆரஞ்சு பழத்தை மொத்தமாக தின்று தீர்த்துள்ளனர் நான்கு நண்பர்கள்.
சீனாவின் Kunming பகுதிக்கு வேலை நிமித்தமாக சென்ற நண்பர்கள் நால்வர், அங்கிருந்து மிக குறைந்த விலையில் பெரிய பெட்டி ஆரஞ்சு பழங்களை வாங்கியுள்ளனர்.
ஆனால், விமான நிலையத்தில் அவர்களுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த ஆரஞ்சு பழங்களை கொண்டு செல்ல வேண்டுமானால் கூடுதலாக 300 யுவான் (£40) கட்டணமாக செலுத்த கோரியுள்ளனர்.
அந்த கட்டணமானது அவர்களால் கண்டிப்பாக செலுத்த முடியாத சூழல். ஆசையாக வாங்கிய ஆரஞ்சு பழங்களை குடியிருப்புக்கும் கொண்டு செல்ல முடியாது என தெரிந்ததும், அதை வீணாக்க மனமில்லாத அந்த நண்பர்கள் நால்வரும், முடியும் மட்டும் தின்று தீர்க்க முடிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து தடாலடியாக களத்தில் குதித்த நால்வரும், வெறும் 30 நிமிடங்களில் மொத்த ஆரஞ்சு பழங்களையும் தின்று தீர்த்துள்ளனர்.
இனி வாழ்நாளில் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையே எழாத அளவுக்கு அந்த சம்பவம் அமைந்தது என அந்த நால்வரில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், சுமார் 30 கிலோ ஆரஞ்சு பழங்களை மொத்தமாக தின்றதால், அந்த நால்வருக்கும் வாய்ப்புண் ஏற்பட்டதாக உள்ளூர் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நால்வரின் செயலை சமூக ஊடகம் கேலியும் கிண்டலுடன் எதிர்கொண்டுள்ளது.
இவர்கள் நால்வரும் ஆளுக்கு கொஞ்சம் பிரித்தெடுத்து, தனித்தனியாக கொண்டு சென்றிருந்தால், இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.