விடுமுறையைக் கொண்டாட ஆசையாக.,தீவுக்கு சென்ற பிரித்தானிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
குடும்ப விடுமுறைக்காக சென்ற நான்கு வயது வடக்கு அயர்லாந்து சிறுவன், நீச்சல் குளத்தில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் தீவு
வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த தம்பதி ரிச்சர்ட், ஜோன்னே. இவர்களது 4 வயது மகன் எட்வர்ட் ஜேம்ஸ். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாட ஸ்பெயின் தீவான Tenerifeவுக்கு சென்றுள்ளனர்.
தீவின் தெற்கில் உள்ள ஒரு பிரபலமான விடுமுறை இடமான சான் மிகுவல் டி அபோனாவில் உள்ள நீச்சல் குளத்தில் சிறுவன் விளையாடியுள்ளார்.
உள்ளூர் நேரப்படி, மாலை 5 மணிக்கு முன்பாக சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிறுவன் இறப்பு
இதனையடுத்து அவர் நீச்சல் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனை உயிர்ப்பிக்கும் தீவிர முயற்சி நடந்துள்ளது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறுவன் எட்வர்ட் இறந்துவிட்டார். சம்பவ இடத்திற்கு இரண்டு மேம்பட்ட உயிர் ஆதரவு ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஒரு மருத்துவ ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டன.
பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஊடகத்திடம் கூறுகையில்,
"ஸ்பெயினில் இறந்த ஒரு பிரித்தானிய குழந்தையின் குடும்பத்திற்கு நாங்கள் ஆதரவளித்து வருகிறோம், மேலும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |