180 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்! 8 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு... திக் திக் வீடியோ
இந்தியாவில் 180 ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.
பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை சரியான முறையில் மூடப்படாததால் பல குழந்தைகளின் உயிர்கள் பறிபோய் உள்ளன.
இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனாலும், பலர் ஆழ்குழாய் கிணறு விஷயத்தில் இன்னும் அலட்சியமாகவே உள்ளனர்.
இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் பதேகாபாத் மாவட்டம் தாரியாயி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அமைத்திருந்த ஆழ்குழாய் கிணறு சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது.
4 Years Fell in Borewell Rescued Safely By Army NDRF & Other Forces , Agra ??#UttarPradesh #up #Agra #India #Latest #News #Ndrf #army #rescue #operation #borewell #village #indian #news #live #viral #video #police #yogi #yogiaadityanath pic.twitter.com/S6BAKRupjN
— TOP TV MEDIA (@TOPTvcanada) June 14, 2021
நேற்று அந்த நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் சிவா ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். தகவலறிந்து பொலிசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
முதல் கட்டமாக குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன், குளுகோஸ் ஆகியவற்றை வழங்கினர். இந்நிலையில், 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிவா மாலையில் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டான்.
சிறுவன் சோர்வாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுவனை உயிருடன் மீட்ட பேரிடர் மீட்புக் குழுவினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Agra: A team of Indian Army, NDRF, fire brigade and local police successfully rescued a 4-year-old child who fell into borewell in Dhariyai village of Fatehabad earlier today pic.twitter.com/AefPeMjKGJ
— ANI UP (@ANINewsUP) June 14, 2021