கொரோனா நிதியுதவி பெற சுவிஸில் ஆள் இல்லை: 4 மாணவிகளின் சொந்த அனுபவம்
சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் தொடர்பில் நான்கு மாணவிகள் திரட்டிய பெரும் நிதி தற்போது பயனாளர்கள் இல்லாமல் தேங்கியுள்ளதாம்.
கொரோனா பரவலால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் பெர்ன் பகுதியின் நான்கு மாணவிகள் நிதி திரட்ட முடிவு செய்தனர்.
இதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றை துவங்கி, வசதி வாய்ப்புள்ள மக்களிடம் இருந்து நிதியும் திரட்டியுள்ளனர். இவர்களின் இந்த தொண்டு நிறுவனத்தில் பயன் பெற விரும்புவோர், தனிப்பட்ட தகவல்களுடன், உதவி ஏன் தேவை என்பதையும் குறிப்பிட்டு இவர்களை மின் அஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
போலிகளை தவிர்க்கவே இவ்வாறான தகவல்களை திரட்டுவதாக குறித்த மாணவிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பொருளாதார பாதிப்பை எதிர்கொண்ட ,மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என நான்கு மாணவிகளில் ஒருவரான நினா தெரிவித்துள்ளார்.
தற்போது வரை 26 பேர்கள் மட்டுமே நிதியுதவி பெற்றுக்கொண்டுள்ளதாகவும், அதன் பின்னர் மக்கள் எவரும் நிதியுதவி கோரி தங்களை நாடவில்லை எனவும் நினா தெரிவித்துள்ளார்.
தங்களிடம் தற்போது 5,647 பிராங்குகள் நிதி கையிருப்பு இருப்பதாகவும், உதவி பெற ஆட்கள் இல்லை எனவும், இந்த நிதியை என்ன செய்வது என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.