உலகில் நான்காவதாக தங்கத்தைக் குவித்து வைத்திருக்கும் நாடு... சொந்தமாக தங்கச் சுரங்கம் இல்லை
உலகளவில் மத்திய வங்கிகள் தங்கள் தங்க இருப்புக்களை அதிகரித்து வருவதால், தங்கத்தின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதில் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தனித்து நிற்கிறது.
உலகளவில் நான்காவது
அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக உலகளவில் நான்காவது பெரிய இருப்பு கொண்ட 2,437 டன் தங்கத்தைக் குவித்து வைத்திருக்கும் பிரான்சிடம் தங்கச் சுரங்கங்கள் இல்லை.
உள்நாட்டு தங்க உற்பத்தி குறைவாக இருக்கும் நிலையில், பிரான்ஸ் டன் கணக்கில் தங்க இருப்பை எவ்வாறு குவித்தது என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
காலனித்துவ காலத்தில், அல்ஜீரியா, துனிசியா, மொராக்கோ, செனகல், மாலி, புர்கினா பாசோ, பெனின், கினியா, ஐவரி கோஸ்ட் மற்றும் நைஜர் உள்ளிட்ட ஏராளமான ஆப்பிரிக்க நாடுகளின் மீது பிரான்ஸ் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது.
பிரெஞ்சு காலனித்துவ நிர்வாகம் இந்த நாடுகளைச் சுரண்டி, கணிசமான அளவு தங்கம் மற்றும் பிற வளங்களை சொந்தமாக்கியது. சுதந்திரத்திற்குப் பிறகும், இந்த நாடுகளில் பல பிரான்சுடன் பொருளாதார உறவுகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன, பெரும்பாலும் அவற்றின் மத்திய வங்கிகள் தங்கள் தங்க இருப்புக்களில் ஒரு பகுதியை பிரான்சிற்குள் பராமரிக்க வேண்டும் என்ற ஒப்பந்தமும் முன்னெடுக்கப்பட்டது.
அமெரிக்காவில் மட்டும்
2023 ஆம் ஆண்டில் உலக தங்க உற்பத்தியில் சீனா 378.2 டன்களை உற்பத்தி செய்து முன்னணியில் இருந்தது, அதைத் தொடர்ந்து ரஷ்யா 321.8 டன்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. அவுஸ்திரேலியாவின் தங்க உற்பத்தி 293.8 டன்களை எட்டியது,
கனடா 191.9 டன்களை உற்பத்தி செய்தது. அமெரிக்கா 166.7 டன், கானா 135.1 டன், இந்தோனேசியா 132.5 டன், பெரு 128.8 டன், மெக்சிகோ 12.6 டன், உஸ்பெகிஸ்தான் 119.6 டன் என உற்பத்தி செய்தன.
அமெரிக்காவில் மட்டும் தற்போது 8,133.46 டன் தங்கம் இருப்பு வைத்துக்கொண்டுள்ளது. கடந்த மார்ச்சில் வெளியான தரவுகளின் அடிப்படையில் ரஷ்யாவின் 217.4 பில்லியன் டொலர் மதிப்பிலான தங்கம் இருப்பு உள்ளது. அதாவது 2,335.85 டன் என கூறப்படுகிறது. இந்தியாவிடம் 879.59 டன் தங்கம் கையிருப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |