பிரான்சில் 100 யூரோ ஊக்க தொகை... இன்று முதல் விநியோகம்! யார் யாருக்கெல்லாம் தெரியுமா?
பிரான்சில் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு 100 யூரோக்கள் ஊக்கத் தொகை வழங்கும் பணி இன்று முதல் வழங்கப்படுகிறது.
பிரான்சில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, மற்றும் எரிவாயு விலை உயர்வு காரணமாக, அரசு கடந்த நவம்பர் மாதம் தனி நபர் வருமானம் 10,800 யூரோக்களுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 100 யூரோக்கள் ஊக்க தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தது.
ஆனால் இந்த ஊக்கத்தொகையானது, வருமான வரி செலுத்தும் தொகைகளுக்கு ஏற்ப மாறுபடும் என்பதால், 50 யூரோவில் இருந்து 200 யூரோக்கள் வரை வழங்கப்படும் என ஊடக பேச்சாளர் Gabriel Attal கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த ஊக்க தொகை வழங்கும் பணி இன்று(20.12.2021) முதல் விநியோகிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 5 முதல் 8 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.