பிரான்சில் 12 முதல் 18 வயதிற்குட்பட்டோரு தடுப்பூசி எப்போது போடப்படும்? ஜனாதிபதி மேக்ரான் அறிவிப்பு
பிரான்சில் 12 வயது முதல் 18 வயதிற்குட்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுவது குறித்த திகதியை, ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிரான்சில் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் படி நாட்டில் வயதானவர்கள் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று LOT-யில் இருக்கும் Saint-Cirq-Lapopie கிராமத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், 12 முதல் 18 வயதிற்குட்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுவது குறித்து கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், நாட்டில் வரும் ஜுன் 15-ஆம் திகதிக்குள் 30 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டவிடும் என்பதால், வரும் ஜுன் 15-ஆம் திகதியில் இருந்து 12 முதல் 18 வயதிற்குட்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடும் பணியை நாங்கள் ஆரம்பிக்க உள்ளோம்.
வரும் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அனைத்து குழந்தைகளும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், ஜனாதிபதி மேக்ரான் இந்த அறிவிப்பை இன்று அறிவித்துள்ளார்.
மேலும், பிரான்சில் கொரோனா பரவல் குறைந்தாலும், Landes-ன் DAX-ல் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும், இந்திய டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.