நடுக்கடலில் 100-க்கும் மேற்பட்ட அகதிகள் பத்திரமாக மீட்பு! எந்த நாட்டில் தெரியுமா?
பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணம் மேற்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் கடலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸில் இருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு, கடந்த 24-ஆம் திகதி(நவம்பர் 2021) ஆங்கில கால்வாயை நோக்கி புறப்பட்ட போது, படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் குழந்தை, பெண்கள் உட்பட 27 அகதிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம், பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக புறப்பட்ட 100-க்கும் மேற்பட்ட அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த வியாழக்கிழமை(16.12.2021) இரவு பிரான்சின் பா து கலே கடற்பரப்பில் இருந்து, சிறிய படகு ஒன்றில் பிரித்தானியா நோக்கி அகதிகள் பயணித்துள்ளனர்.
இது குறித்த தகவல் பிரான்ஸ் Société nationale de sauvetage en mer அதிகாரிகளுக்கு தெரியவர, நடு கடலில் வைத்து, அந்த படகில் பயணித்த 138 பேரை பத்திரமாக மீட்டனர்.
அதன் பின் மீட்கப்பட்ட அவர்கள், அனைவரும் Boulogne-sur-Mer பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர், மீட்கப்பட்ட அகதிகள் குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை.