சமூக ஊடகங்கள் பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்கும் முதல் ஐரோப்பிய நாடு
சமூக ஊடகங்கள் பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்கும் முதல் ஐரோப்பிய நாடு என்னும் பெயர் பிரான்சுக்குக் கிடைக்க உள்ளது.
சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை
2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் ஒன்றிற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதலளித்துள்ளது.

இந்தச் சட்டம் இரண்டு கட்டங்களாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் முதல், 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் புதிதாக சமூக ஊடகக் கணக்குகளைத் துவங்க முடியாது.
அனைத்து புதிய கணக்குகளுக்கும் வயதை உறுதி செய்வது அவசியமாகிவிடும்.

அடுத்ததாக, 2027 ஜனவரி முதல், இந்த விதி ஏற்கனவே பயன்பாட்டிலிருக்கும் சமூக ஊடகக் கணக்குகளுக்கும் பொருந்தும் வகையில் மாற்றப்படும். அதாவது, சமூக ஊடகங்களை யார் பயன்படுத்தினாலும், அவர்கள் தங்கள் வயதை உறுதி செய்யவேண்டியிருக்கும்.
தனது பதவிக்காலம் முடியும் முன் இந்த தடையை அமுல்படுத்துவேன் என் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உறுதி பூண்டிருந்த நிலையில், தற்போது 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் அமுலுக்கு வருவதை அவர் வரவேற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |