பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம்
பிரான்ஸில் காருக்குள் சிக்கி கொண்டு இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காருக்குள் உயிரிழந்த சிறுவர்கள்
பிரான்சில் நிலவிவரும் கடுமையான வெப்ப அலைகளுக்கு மத்தியில், அந்த நாட்டின் கார்பென்ட்ராஸ் நகரில் காசிம் பெனுவாலி(Kassim Benouali) என்ற 4 வயது சிறுவனும், சாதிக்(Sadek) என்ற 2வயது சிறுவனும் காருக்குள் சிக்கி கொண்டு கடுமையான வெப்பத்தினால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீச்சல் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கி விட்டு மதியம் 1 மணியளவில் வீடு திரும்பிய போது, சிறுவர்கள் இருவரும் காரில் சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து அவர்களின் தாய் வஃபா எல் பூப்காரி(Wafa El Boubkari) அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு அவசரகால படையினர் விரைந்து வந்தும் சிறுவர்களை காப்பாற்ற முடியவில்லை. இருவரும் ஏற்கனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயின் முன்னுக்குப் பின் முரண்
இந்நிலையில் சிறுவர்கள் காரிக்குள் எப்படி சிக்கினர் என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தாயாருக்கு தெரியாமல் தாங்களே காரின் கதவை சிறுவர்கள் பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், தாய் வஃபாவின் பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடும் வெப்பம் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக சிறுவர்கள் உயிரிழந்து இருப்பது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |