புத்தாண்டு தினத்தில் 3 பெண்கள் கொலை! அதிர்வலையில் பிரான்ஸ்
பிரான்சில் புத்தாண்டு தினத்தன்று 3 பெண்கள் கொலை செய்யப்பட்டதால், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அழுத்தம் அதிகரித்து வருகிறது.
பிரான்சில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கம் குடும்ப வன்முறையைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள் எடுத்துள்ள போதிலும், புத்தாண்டு தினத்தன்று மூன்று பெண்கள் அவர்களது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று வழக்குகளிலும், உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, தாங்களே தவறு செய்ததாக கொலை செய்த ஆண்கள் காவல்துறையினரிடம் தெரிவிததுள்ளனர்.
இந்நிலையில், பிரான்சில் உள்ள மகளிர் அமைப்புகள், கடும் நடவடிக்கை எடுக்கவும் மற்றும் அனைத்து பிரெஞ்சு காவல்துறையினருக்கும் பயிற்சி அளிப்பதற்கும், தவறான கூட்டாளிகளால் குறிவைக்கப்பட்டவர்களுக்கு சிறந்த பாதுகாப்பை உறுதி செய்வதற்கும்1 பில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொதுமக்களின் கோபத்திற்கு விடையளிக்கும் வகையில், அமைச்சர்கள் செவ்வாயன்று ஒரு கொலை நடந்த நகரத்தில் உள்ளூர் அதிகாரிகளுடன்ஓன்லைன் சந்திப்பை நடத்தினர்.
ஆனால் அதிகாரிகளின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த Nous Toutes குழுவின் செயற்பாட்டாளர் Marylie Breuil, "24 மணி நேரத்தில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் சில நாட்களுக்குப் பிறகு ஒரு சிறிய கூட்டத்தை ஏற்பாடு செய்வது தான் இதற்கான ஒரே எதிர்வினையா?" எனறு கடுமையாக சாடியுள்ளார்.
இத்தகைய கொலைகளைத் தடுக்க உயர்மட்ட முயற்சிகளை எடுத்துள்ள பிரெஞ்சு அரசாங்கமும், பிரெஞ்சு ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக் காட்ட இருந்தும், இந்த மூன்று கொலை சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரெஞ்சு ரிவியரா நகரமான நைஸில் 45 வயதான பெண் ஒருவர் புத்தாண்டு தினத்தன்று தனது மகனின் கார் டிக்கியில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். பொலிஸ் விசாரணையில் அப்பெண் கணவர் கொலையை ஒப்புக்கொண்டார்.
அதே நாளில், வடகிழக்கு பிரான்சில், 56 வயதுடைய பெண் ஒருவர் லேப்ரி நகரில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அவரது காதலனே ஒரு வாக்குவாதத்தில் அவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
மேற்கு பிரான்சில், 27 வயதான பெண் ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கிடந்தார். இந்த சம்பவத்திலும் அவரது காதலன் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.