பிரான்சில் வெள்ள அபாயம் காரணமாக இந்த 31 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! வெளியான முக்கிய அறிவிப்பு
பிரான்சில் வெள்ள அபாயம் காரணமாக குறிப்பிட்ட 31 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கிடையே பிரான்சை வானிலையும் மிரட்டி வருகிறது. அதன் படி இன்று வியாழக் கிழமை மோசமான காலநிலை காரணமாக 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
Aisne Ardennes Aube Cher Creuse Indre Loir-et-Cher Loiret Marne Nièvre Nord Seine-et-Marne Yonne குறிப்பாக, பிரான்சின் தென்மேற்கு பிராந்தியங்களில் புயல் மழைக்கு வாய்ப்பிருப்பதால், இங்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், அதே சமயம் Deux-Sèvres, Charente-Maritime, Gironde மற்றும் Landes ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- Aisne
- Ardennes
- Aube
- Cher
- Creuse
- Indre Loir-et-Cher
- Loiret
- Marne
- Nièvre
- Nord
- Seine-et-
- Marne
- Yonne
Rhône மாவட்டத்தில் வெப்பம் நிலையே நிலவும், அனல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது, 17 மாவட்டங்கள் இந்த பட்டியலில் இணைந்து மொத்தமாக 31 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் இன்று ஆலங்கட்டி மழை பொழிந்ததாக கூறப்படுகிறது.
- Corrèze Lot
- Tarn-et-Garonne
- Vienne
- Haute-Vienne
- Charente
- Charente-Maritime
- Deux-Sèvres
- Dordogne
- Gironde
- Landes
- Lot-et-Garonne
- Pyrénées-Atlantiques
- Ariège
- Haute-Garonne
- Gers
- Hautes-Pyrénées