பிரான்சில் சட்டவிரோதமாக வந்த 35 அகதிகள் மீட்பு! வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் சட்டவிரோதமாக கடற்பயணம் மேற்கொண்ட 35 அகதிகள், நேற்று காலை மீட்கப்பட்டுள்ளனர்.
பிரான்சின், Dunkerque (Nord) நகரில் நேற்று காலை 5.30 மணியளவில், மிக ஆபதான கடற்பயணம் மேற்கொண்ட 35 அகதிகள் Malo-les-Bains கடற்பிராந்தியத்தில் வைத்து மீட்கப்பட்டனர்.
சிறிய படகின் மூலம் அவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருந்ததாகவும், கடல் மீட்பு அதிகாரிகள் (La Société nationale des sauveteurs en mer) இந்த மீட்புப்பணியை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்க்கப்பட்டவர்களில் பல நாடுகளைச் சேர்ந்த ஆண்களும், சில பெண்களும் எனவும். அவர்களில் பலர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அவர்கள் பயணித்த கடற்பிராந்தியத்தில் மணல் கரைகள் மற்றும் திட்டுக்கள் இருப்பதால் குறித்த கடற்பகுதியில் படகு செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.