பிரான்சில் 3-வது கொரோனா தடுப்பூசி! முக்கிய தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சகம்
பிரான்சில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் தரவில் சுகாதார அமைச்சகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசிகள் ஏராளமான மக்கள் போட்டுக் கொண்டதால், பாதுகாப்பிற்காக மூன்றாவது தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இன்னும் ஒரு சில நாடுகளில் இந்த இரண்டு டோஸ்களை போட்டுக் கொள்ள வைப்பதே பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், பிரான்சில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பாக சுகாதார அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பிரான்சில் 34 சதவீதமான மக்கள் மட்டுமே கொரோனாவிற்கான மூன்றாவது தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியடையவர்களான உள்ளனர்.
ஏனெனில், முதல் இரண்டு தடுப்பூசிகளையும் ஆறு மாதங்களுக்கு முன்பாக பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே, மூன்றாவது தடுப்பூசி தேவை கருதி போட்டுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.