பிரான்சில் 5 வயது பிரித்தானிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் நடந்த பயங்கர சம்பவத்தில் 5 வயது பிரித்தானிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுமி Flaine ரிசார்ட்டில் பனிச்சறுக்கு பாடம் படித்துக் கொண்டிருந்தபோது, மற்றொரு பனிச்சறுக்கு வீரர் அவர்மிது மோதினார்.
எதிர்பாராத இந்த விபத்தில், சிறுமி அதிக வேகத்தில் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள், ஆனால் வழியில் ஹெலிகாப்டரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தின்போது, ஒரு தன்னார்வ தீயணைப்பு வீரரான பனிச்சறுக்கு வீரர் சிறுமிக்கு முதலுதவி அளித்தார், அதே நேரத்தில் ஒரு மருத்துவரும் அந்த இடத்திற்கு விரைந்தார் ஆனால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.
சிறுமி உயிரிழந்ததால், 40 வயதான அனைவர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணையில் உள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெனீவாவில் வசித்து வந்துள்ளனர்.
தேசிய ஸ்கை பள்ளியான Ecole du Ski Français (ESF) நடத்தும் பனிச்சறுக்கு பயிற்சியில் மேலும் நான்கு குழந்தைகளுடன் சிறுமி பயின்றுகொண்டிருந்தார்.
'blue' என வகைப்படுத்தப்பட்ட சர்ப்பன்டைன் பனிச்சறுக்கு ஓட்டத்தில் விபத்து ஏற்பட்டது.
சிறுமியின் மரணத்திற்கான காரணத்தை அறிய நாளை பிரேத பரிசோதனை நடத்தப்படும் என் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.