பிரான்சில் 5,00,000 பேர் ஆபத்தில்! கொரோனா வைரசுக்காக இரு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டால் ஏற்படும் பக்கள்விளைவுகள்
பிரான்சில் கொரோனா வைரசுக்காக இரு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டால், அது பெரும் ஆபத்தில் முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, உலகின் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆரம்ப கால கட்டத்தில், கொரோனாவிற்கு ஒரு சில தடுப்பூசிகளே இருந்ததால், அதை மக்கள் அனைவரும் போட்டு வந்தனர்.
ஆனால், இப்போது பல தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால், மக்கள் தங்களுக்கு பிடித்த தடுப்பூசியை போட்டுக் கொள்கின்றனர். இருப்பினும், கொரோனா வைரசுக்காக ஒருவர் இருவேறு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டால் அது பக்கவிளைவில் சென்று முடியும் என ஆய்வு தெரியவந்துள்ளது.
பல நாட்களாக இடம்பெற்ற ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. The Lancet எனும் ஒரு அறிவியல் ஊடகம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இரு வேறு தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட 830 பேரின் இரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு மேற்கொண்ட போது அதில் பக்கவிளைவுகளுக்கான அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக ஆய்வுகளை பிரான்சுக்காக உயர் மருந்துகள் ஸ்தாபனம் மேற்கொண்டுள்ளது. பிரான்சில் இதுவரை 500.000 பேர் இருவேறு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ளதால், இவர்கள் கடும் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடலாம், ஆபத்தில் சிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இரண்டு வெவ்வேறு தடுப்பூசி என்றால், முதலாவது தடுப்பூசி-ஆக AstraZeneca இனை போட்டுக்கொண்டவர்கள் இரண்டாவதாக Pfizer தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளவது என்பது ஆகும்.