பிரான்சில் இந்த வயதை எட்டியவர்கள் உடனடியாக தடுப்பூசி போடுங்க்! அரசு விடுத்துள்ள எச்சரிக்கை தகவல்
பிரான்சில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் தடுப்பூசி போடுவது குறித்து கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.. தடுப்பூசி எவ்வளவு முக்கியம் என்பதையும், அரசு விளம்பரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று தலைநகர் பாரிஸ் La Défense-வில் உள்ள கொரோனத் தடுப்பூசி போடப்படும் மையத்திற்கு சென்றிருந்த பிரதமர் Jean Castex, 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் உடனடியாகத் தடுப்பு ஊசிகள் போட்டுக் கொள்ளும் படி கூறியுள்ளார்.
மேலும், அவர் AstraZeneca உட்பட கிடைக்கக் கூடிய எந்தவிதமான கொரோனாத் தடுப்பு ஊசிகளாலும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 55 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு AstraZenecaகொரோனத் தடுப்பு ஊசிகள் பாதுகாப்பானவை.
பிரான்சில் இன்னும் இரண்டு மில்லியன் AstraZeneca கொரோனாத் தடுப்பு ஊசி அலகுகள் உபயோகிக்கப்படாமல் உள்ளன.
அடுத்து வரும், நான்கு வாரங்களில் மூன்று மில்லியன் அஸ்ராஸெனகா அலகுகள் பிரான்சிற்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் கூறினார்.