பிரான்சில் காரில் சென்ற பெண்ணுக்கு திருடனால் நேர்ந்த நிலை! ஒரு விரலை நிரந்தரமாக இழந்த பரிதாபம்
பிரான்சில் திருடனிடம் இருந்து தன்னுடைய பையை காப்பாற்ற முயன்ற பெண் ஒருவர் விரலை இழந்து தவித்து வருகிறார்.
பிரான்சின் பாரிஸ் தலைநகரில் இருக்கும் Bois de Boulogne-விற்கு கடந்த வியாழக்கிழமை வந்திருந்த பெண் ஒருவர், அங்கிருந்து புறப்படுவதற்காக, தன்னுடைய கார் இருக்கும் பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது, தனது கைப்பையை டிரைவர் இருக்கைக்கு அருகே வைத்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது சாலையில், போக்குவரத்து காரணமாக நிறுத்தப்பட்டிருந்த போது, குறித்த காரை நெருங்கிய திருடன், காருக்குள் இருந்த பையை திருட முற்பட்டுள்ளான்.
இதனால் காரின் உள்ளே இருந்த அந்த பெண், பையை தன் பக்கம் இழுக்க, அவன் மறுபக்கம் இழுக்க, முடிவில், திருடன் கைப்பையை இழுத்துக்கு தப்பி ஓடியுள்ளான். ஆனால் குறித்த பெண்ணின் விரல் இந்த சம்பவத்தால் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவர், 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Georges-Pompidou மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 70 வயது எனவும், அவர் நிரந்தரமாக தன்னுடைய விரலை இழந்துள்ளதாக கூறினர்.
மேலும், அந்த திருடன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.