பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 81 பேர் பலி! 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி எப்போது?
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திகதியை அரசு தள்ளி போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இன்னும் பிரான்சில் ஒரு முடிவை தரவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில், 13,948-பேர் புதித்தாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் பிரான்சில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,877, 787-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 107,616-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் இப்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில், மே 15 ஆம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என அரசு அறிவித்திருந்தது.
ஆனால் நேற்றைய தினம் அவர்களுக்கான தடுப்பூசிகள் போடும் பணி ஆரம்பிக்கப்படவில்லை. ஏனெனில், முன்னதாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளவர்களின் உடல்நலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பொறுத்தே இந்த திகதி தீர்மானிக்கப்படும் சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையோடு பிரான்சில் 20 மில்லியன் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போட்டுக்கொண்டுள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் 30-ஆம் திகதிக்குள் 30 மில்லியன் பேராக இதை உயர்த்த திட்டமிடப்படுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.