அப்போதிருந்தே தொடர்கிறது... ரஷ்யா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த பிரான்ஸ்
கடந்த 2021 முதல் ரஷ்ய உளவுத்துறை மீண்டும் மீண்டும் சைபர் தாக்குதல்களை நடத்தியதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்ய உளவு அமைப்புகள்
பிரான்சை சீர்குலைக்கும் முயற்சியில் அமைச்சகங்கள் உட்பட டசின் கணக்கான அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரான்சின் வெளிவிவகார அமைச்சகம் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளது.
உண்மையில் 2015ல் இருந்தே ரஷ்ய உளவு அமைப்புகள் பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளதாகவே வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் என்று கூறப்படுபவர்களால் ஹேக் செய்யப்பட்டு டிவி5 மொண்டே ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். ரஷ்ய உளவுத்துறையின் APT28 என்ற அமைப்பே சைபர் தாக்குதல்களுக்கு காரணம் என குறிப்பிட்டுள்ள பிரான்ஸ்,
2017ல் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தொடர்பிலான மின்னஞ்சல்கள் கசியவிடப்பட்டு, தவறான தகவல்கள் பரவ காரணமாக அமைந்தது என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, APT28 அமைப்பானது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்களிடமிருந்து மிக முக்கியமான தரவுகளைப் பெற முயன்றுள்ளது என பிரான்சின் ANSSI அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சைபர் உளவு துறையில்
மேலும், உள்நாட்டு அரசியலில் நிச்சயமற்ற தன்மை மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போர் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக அரசாங்கம் பொதுவில் செல்ல முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பிரெஞ்சு அமைச்சகங்கள், உள்ளூர் நிர்வாகங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள், விண்வெளி நிறுவனங்கள், நிதி மற்றும் பொருளாதாரத் துறையில் உள்ள நிறுவனங்கள் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ANSSI தெரிவித்துள்ளது.
ஹேக்கிங் நிபுணர்கள் தெரிவிக்கையில், ரஷ்யாவின் APT28 அமைப்பு குறைந்தது 2004 முதல், முதன்மையாக சைபர் உளவு துறையில் உலகளவில் செயல்பட்டு வருகிறது என்றே குறிப்பிட்டுள்ளனர்.
மே 2024 ல், ஜேர்மனி APT28 அதன் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனங்கள் மற்றும் ஆளும் கட்சி மற்றும் பிற நாடுகளில் உள்ள இலக்குகள் மீது சைபர் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |